கொரோனா வைரஸ் நோய் எதிரொலி காரணமாக தமிழ் மாநில ஜமாஅதுல் உலமா சபை விடுத்த கோரிக்கைக்கு இணங்க கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த செய்தி பற்றி கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு ஒன்றை இன்று 26-03-2020 வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக...நோயாளிகளும் ஆரோக்கியமானவர்களும் ஒன்று சேர வேண்டாம் என்ற நபிமொழியின் அடிப்படையில்...தமிழக அரசின் 144 தடை உத்தரவை பின்பற்றும் விதமாக கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தின் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன
இதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
*கோபாலப்பட்டிணம் அனைத்து பள்ளிவாசல்களில்
இன்று 26-03-2020 வியாழக்கிழமை மஃரிப் தொழுகை முதல் பாங்கு மட்டும் சொல்லப்படும்...
*ஜமாஅத்தாக தொழுகை பள்ளியில் நடைபெறாது என்பதை அறிவித்து கொள்கின்றோம்...
*மேலும் ஜூம்ஆ தொழுகை அவரவர் வீடுகளில் லுஹர் தொழுகையாக (நான்கு ரக்அத்துகளாக) நிய்யத் செய்து தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்...
*இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்பதனை கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்...
குறிப்பு: கோபாலப்பட்டிணத்தில் இந்த நடைமுறை இன்று 26.03.2020 வியாழக்கிழமை மஃரிப் தொழுகை முதல் அமலுக்கு வருகிறது.
தகவல்:
முஸ்லிம் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.