Breaking: தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு ஜமாத் வந்தவர்களிடம் இருந்து கொரோனா பரவியது என்ற செய்தி பொய்..



மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுவதற்கு தாய்லாந்தில் இருந்து தப்லீக் ஜமாத் வந்த 8 பேர் தான் காரணம் என்று சிலரால் கடந்த நான்கு நாட்களாக பரப்பப்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் இருந்து தப்லீக் ஜமாத் வந்த 8 பேர் இந்தியாவிற்கு ஜனவரி 31 அன்றே வருகை தந்துவிட்டனர். (அதாவது கொரோனா வருவதற்கு முன்னரே).

தாய்லாந்து தப்லீக் ஜமாத்தினர் டெல்லி நிஜாம்தீன் மர்க்கஸிலிருந்து 8 பேரும் இரண்டு தமிழ்நாட்டு வழிகாட்டியுடன் மர்க்கஸில் மதுரை வழித்தடம் (Route) பெற்று டெல்லி நிஜாமுதினிலிருந்து சம்மர்கிரந்த் இரயில் மூலம் கடந்த (12.03.2020)  அதிகாலை மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து அண்ணாநகர் மர்க்கஸ் சென்று 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.

மாவட்ட தப்லீக் பொறுப்புதாரி முறையாக 8 பேரின் பாஸ்போர்ட் சம்பந்தமான ஆவணங்களின் நகல்களை பெற்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டு தாய்லாந்து தப்லீக் ஜமாத்தினருக்கு மதுரை புறநகர் பகுதியில் வழித்தடம் (Route) கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர்கள் பயணத்தை மேற்கொண்டு  கோமதிபுரம், விளாங்குடி,செல்லூர் பள்ளிகளுக்கு சென்றுவிட்டு மாலைப்பட்டி பள்ளிக்கு 22.3.2020 இரவு 9.00 மணிக்கு வந்தடைந்தனர்.

23.3.2020 மதியம் கொரோனோ தொற்று பீதியில் இருந்த சிலர் மாலைப்பட்டி பள்ளிவாசலில் வெளிநாட்டினர் பதுங்கியிருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பிறகு காவல்நிலையத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் தாய்லாந்து ஜமாத்தினர் எப்போது மதுரை வந்தனர் அதன் பிறகு எங்கே சென்றனர் போன்ற தகவல்கள் புள்ளி விவரத்தோடு கொடுக்கப்பட்டது.

தகவல்கள் முறையாக இருப்பதை பெற்றுக்கொண்டு காவல் துறை ஆய்வாளர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து சென்றுவிட்டார்.

மேலும் நடந்ததை பொறுக்கமுடியாத சிலர்  சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கின்றனர். வந்தவர்களுக்கு கொரோனோ தொற்று இருப்பதாக சுகாதாரதுறை அதிகாரிகள் மாலைப்பட்டி ஜமாத் நிர்வாகிகளை தொடர்புகொண்டு நாளை (24.3.2020) நாங்கள் 8 பேரையும் செக்கப் செய்ய வருவதாக தகவல் அளிக்கின்றனர்.


மறுநாள்  சமயநல்லூர் சுகாதாரத்துறையில்  இருந்து அரசு மருத்துவர்கள் மற்றும் (VAO,RI,POLICE) இன்னும் அரசு அதிகாரிகள் மாலைப்பட்டி பள்ளிவாசலுக்கு வந்து தாய்லாந்து நாட்டினர் 8 பேரையும் செக்கப் செய்துவிட்டு இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதாகவும் இவர்கள் மேற்கொண்டு பயணத்தை தொடரலாம் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்..

25.3.2020 சுகாதாரதுறையினர் மீண்டும் மாலைப்பட்டி வந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அரசு தனிமைப்படுத்த சொல்லியிருப்பதாக தாய்லாந்து ஜமாத்தினர் 8 பேரையும் கப்பலூர் அழைத்து சென்றனர்.

அவர்கள் அழைத்து சென்றதில் இருந்து அனைத்து ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் தாய்லாந்தில் இருந்து வந்து மாலைப்பட்டியில் தங்கியிருந்த 8 பேருக்கும் கொரனோ அறிகுறி இருப்பதாக வெளியிட்டனர்.

குறிப்பாக 8 பேரில் இரண்டு பேருக்கு கொரனோ தொற்று இருப்பதாக  கப்பலூரிலிருந்து மதுரை அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்கின்றனர்.


அதுவும் ஊடகங்களில் மாலைப்பட்டியில் தங்கியிருந்த 8 பேரில் 2 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்கின்றனர் என்று தலைப்பு செய்தியாக வெளி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று காலை (26.3.2020) 11.00 மணிக்கு மாவட்ட சுகாதாரதுறையினரால் தாய்லாந்தில் இருந்து மதுரை வந்து மாலைப்பட்டியில் தங்கியிருந்த 8 பேருக்கும் கொரனோ தொற்று இல்லை என்று அறிவித்திருக்கிறது.

ஆகவே தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு ஜமாத் வந்தவர்களிடம் இருந்து கொரோனா பரவவில்லை என உறுதியாகியுள்ளது.

தகவல்.
A.அஜ்மல்கான்.
மாலைப்பட்டி.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments