கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்.!



உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.


இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது குறித்து மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக இன்று 21.03.2020 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் பெரியபள்ளிவாசல் அருகாமையில் ஜமாத் கட்டிடத்தில் அமைந்திருக்கக்கூடிய GPM பொதுநல சேவை சங்கம் அலுவலகத்தின் வெளியே கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு முகாம் மற்றும் எவ்வாறு கொரோனா வைரஸ் வராமல் தற்காத்து கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு முகாமில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மருத்துவர் முஹம்மது ஆசிக் அவர்கள் கலந்து கொண்டு கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது போன்ற பல விஷயங்களை அங்கு வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். 

இதில் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மற்றும் GPM பொதுநல சேவை சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தகவல்: GPM பொதுநல சேவை சங்கம், கோபாலப்பட்டிணம்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments