ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த சிங்கப்பூர்.!உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சிங்கப்பூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. 

சிங்கப்பூரில் புதிதாக சுமார் 1,111 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமலில் உள்ள ஊரடங்கை ஜூன் 1- ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார். ஏற்கனவே மே 4- ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments