ரியாத்தில் உணவின்றி தவித்த அனைத்து சமுதாய மக்களுக்கு ரியாத் மண்டல தமுமுக சார்பாக உணவு பொருட்கள் வழங்கல்.!சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலையிழந்து உணவின்றி தவித்த 30-க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கு ரியாத் மத்திய மண்டல தமுமுக சார்பாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.


உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட அவசரநிலை காரணத்தால் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலையிழந்து உணவின்றி தவித்த அனைத்து சமுதாய மக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை ரியாத் மண்டல தமுமுக சார்பாக 20-04-2020 அன்று பத்தாஹ் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரியாத் மத்திய மண்டல அலுவலகத்தில் வைத்து சுமார் 85 ரியால் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பும் சமைக்க வாய்ப்பில்லாத சகோதர்களுக்கு சிறிய அளவிலான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதில் பயன் பெற்றவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு உணர்ச்சிப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதற்காக உழைத்த மண்டல நிர்வாகிகள் மற்றும் பத்தாஹ் கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் இதற்காக பொருளாதார உதவி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் தங்கள் பகுதிகளில் வாழும் இதுபோன்ற பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

மேலும் ஏதேனும் உதவி தேவையெனில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0532883605

தகவல்:-
தமிழ் தஃவா-தமுமுக & மமக,
ஊடக பிரிவு,
மத்திய மண்டலம்,
ரியாத், சவூதிஅரேபியா.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments