அறந்தாங்கியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 4 கடைகளுக்கு சீல்.!அறந்தாங்கி நகரில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், வியாபாரம் செய்த 4 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.


ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 1 மணி வரை இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் தலைமையிலான அலுவலா்கள், நகரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்து வந்த குளிா்பான நிலையம், முடித் திருத்தகம், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் இரு கடைகள் என மொத்தமாக 4 கடைகளுக்கு நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் சீல் வைத்தாா்.மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த 6 பேரிடம் தலா ரூ.100 வீதம் ரூ.600 அபராதம் வசூலிக்கப்பட்டது.ஆய்வின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளா் சி.சேகா், வருவாய் ஆய்வாளா் தேவராஜ், நகரமைப்பு ஆய்வாளா் அன்பழகன் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments