புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 132 பேர் கைது.!கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து, தடை உத்தரவைமீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து, அவர்களின் வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments