திருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு.!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சி-இலங்கை இடையே போக்குவரத்து சேவையை மே மாதம் 15-ந் தேதி வரை ரத்து செய்து அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் திருச்சி-இலங்கை இடையே காலை 9-40 மணிக்கு ஒரு முறையும், பிற்பகலில் 3.40 மணிக்கு ஒரு முறையும் என தினமும் இரு முறை விமானம் இயக்கப்பட்டு வந்தது. பயணிகள் போக்குவரத்து தவிர தினசரி சுமார் 2 முதல் 7 டன் வரை சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. ஊரடங்கு காரணமாக இந்த சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments