கோபாலப்பட்டிணத்தில் மின் கட்டணத்தை சேவை கட்டணமின்றி செலுத்த நாளை (20.04.2020) கடைசி சிறப்பு முகாம்.!கோபாலப்பட்டிணத்தில் மின் கட்டணத்தை சேவை கட்டணமின்றி செலுத்த நாளை (20.04.2020) கடைசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக கூடுதல் பணம் (கமிஷன்) இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் சில கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. எனவே இதன் காரணமாக நாளை 20.04.2020 (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் மின்கட்டணம் செலுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

✴மின் இணைப்பு எண்,சென்ற மாதத்தின் தொகையை கொண்டு சென்று கூடுதல் தொகை (கமிஷன்) இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு GPM மீடியா மற்றும் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

தேதி&நாள்: 20.04.2020 ( திங்கள்கிழமை) நாளை

மின் கட்டணம் செலுத்தும் இடம்: தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல், தங்கமஹால் திருமண மண்டபம் அருகில், கோபாலப்பட்டிணம்.

குறிப்பு: கூடுதல் தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த நாளையே (20.04.2020) கடைசி முகாமாகும்.

என்றும் சமுதாயப்பணியில்...,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை.
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:

9715503699, 8124150046
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments