புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவில் தளர்வு இல்லை: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.!தமிழக அரசின் மறுஅறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை உத்தரவில் தளர்வு இல்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆணையின்படி 20.4.2020 க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 20.4.2020 அன்று தெரிவிக்க உள்ளது. 

இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுக்க உள்ளார்கள். எனவே, இதுகுறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி அமலில் தொடரும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments