குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.!குவைத்தில் இருக்கும் 24 இந்தியர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பின்  தடம் படிப்படியாக விரிவடைந்து வருகிறது. வளைகுடாவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை 28 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தினசரி குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அவர்களில் 24 இந்தியர்கள், இரண்டு வங்காள தேசம் மற்றும் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குவைத்தில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கையை 317 ஆக உயர்த்தி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments