கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு-பிரதமர் லீ சியென் லூங்



சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார்.

அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.  1,049 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும்.  அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments