கொரோனா எதிரொலி: மணமேல்குடி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளுக்கு கைத்தெளிப்பான்கள் வழங்கல்.!மணமேல்குடியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊராட்சி ஒன்றியம் சார்பில் 28 ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கைத்தெளிப்பான் மற்றும் கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய குழுத்தலைவர் பரணிகார்த்திகேயன் தலைமை தாங்கி, 28 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு கைத்தெளிப்பான் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள், மருந்துகள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினி எவ்வாறு தெளிக்கவேண்டும். இதேபோல் உபகரணங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வுடன் விளக்கமளிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments