மணமேல்குடி பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியவர் 2பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 2 டிராக்டர்களில் மணல் கடத்தி வந்தது இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ், பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments