புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம்.!புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், நோய்தடுப்பு நடவடிக்கைகளில் தனியார் மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டிய பங்களிப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது.


 குறிப்பாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் முழுமையான பாதுகாப்பை பின்பற்றுவதுடன், தங்களிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சாதாரணமாக காய்ச்சல் இல்லாமல், சந்தேகத்திற்கு உரியதாக இருக்கும் நோயாளிகள் குறித்த விவரங்களை மேல்சிகிச்சை அளிக்க வசதிக்காக உடனுக்குடன் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இனிவரும் நாட்களில் தேவைக்கேற்ப அரசால் அறிவுறுத்தப்படும் வழிமுறைகளை பின்பற்றி சேவையாற்ற தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன், பொதுசுகாதார துணை இயக்குனர் டாக்டர் அர்ஜுன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments