எஸ்.பி.பட்டினம் அருகே பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது.!ஓரியூர் பட்டமங்கலம் கண்மாய்கரை பகுதியில் சிலர் துப்பாக்கி மூலம் பறவைகளை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள ஓரியூர் பட்டமங்கலம் கண்மாய்கரை பகுதியில் சிலர் துப்பாக்கி (ஏர்கன்) மூலம் பறவைகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது பறவைகளை வேட்டையாடிய அதே பகுதியை சேர்ந்த கலந்தர் அன்சாரி, தமீம் அன்சாரி, முபாரக், முகமது ஹனீபா, செய்யது முகமது ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments