புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக விலகலை பின்பற்றாத மீன், இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை.!புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத மீன், இறைச்சிக் கடை உரிமையாளர்கள்மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று  கலெக்டர்  உமாமகேஸ்வரி எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திடவும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல்-16 அன்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன்  நடத்திய  காணொளிக்காட்சி அறிவுரைகளின்படி,  புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட  அனைத்து   இறைச்சி விற்பனை கடைகள், வாரத்தில் அனைத்தும் நாட்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6  மணி முதல்  பிற்பகல் 1  மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் சொந்த கட்டிடம் மற்றும் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வரும்  மீன், கோழி, ஆடு உள்ளிட்ட  அனைத்து இறைச்சி விற்பனை கடைகள் தொடர்ந்து விற்பனை செய்யலாம்.

ஆனால், சாலையோரங்களிலும், புறம்போக்கு இடங்களிலும் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட  அனைத்து  இறைச்சி விற்பனை கடைகளை  நடத்திட அனுமதி இல்லை. சாலையோரங்களிலும், புறம்போக்கு இடங்களிலும் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட  அனைத்து  இறைச்சி விற்பனை செய்பவர்கள் புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை,  புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின்  எதிர்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலும், அறந்தாங்கி நகராட்சியைப் பொறுத்தவரை, அறந்தாங்கி – பேராவூரணி சாலையில் அமைந்துள்ள வாரச் சந்தையிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6  மணி முதல் பிற்பகல் 1  மணி வரை விற்பனை செய்யலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட  அனைத்து  இறைச்சி விற்பனை கடைகளிலும், கடை உரிமையாளர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடனும், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன், கடைகளுக்கு வரும் பொதுமக்களை முகக்கவசம் அணிந்துகொண்டு  வருவதை   கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக வலியுறுத்தவேண்டும். 

மேலும், இந்த உத்தரவினை கடைப்பிடிக்காத மற்றும்  மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments