9 மணி எதிரொலி: அறந்தாங்கியில் பட்டாசு வெடித்ததில் தீ பிடித்த தென்னை மரம்..!கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் மளிகை, மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.


இதற்கிடையில் கடந்த 3-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, 5-ந் தேதி (நேற்று ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு, வீட்டுவாசலில் ஒளிவிளக்கு அல்லது செல்போன் டார்ச் ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என்றார். 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் பொதுமக்கள் அனைத்து விட்டு, வீட்டுவாசலில் ஒளி விளக்குகளை ஏற்றினார்கள்.

இதையடுத்து அறந்தாங்கியில் பட்டாசு வெடித்ததில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் என்பவரது வீட்டில் நின்ற தென்னை மரத்தில் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments