புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டுவர வாகன வசதி ஏற்பாடு.! கலெக்டர் தகவல்.!விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வாழை, பலா, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் நேரடியாக விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்து, அதனை எடுத்து வந்து வியாபாரிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

இதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டுவர வாடகை வாகனமும் வேளாண்துறையின் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. விவசாயம் சார்ந்த அனைத்துவித உதவிக்கும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (வேளாண்மை) 9486501681 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம். கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து முழுமையாக நாம் இன்னும் விடுபடவில்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில் புதுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் 9600016824, தோட்டக்கலை அலுவலர் 8778623893 என்ற அலைபேசி எண்ணிலும், கந்தர்வக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் 9843917074, தோட்டக்கலை அலுவலர் 8838430105 என்ற அலைபேசி எண்ணிலும், திருவரங்குளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9585473220, தோட்டக்கலை அலுவலர் 8248599765 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் அறந்தாங்கி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9280989396, தோட்டக்கலை அலுவலர் 9092620627 என்ற அலைபேசி எண்ணிலும், கறம்பக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9944213234, தோட்டக்கலை அலுவலர் 8220625670 என்ற அலைபேசி எண்ணிலும், குன்றாண்டார்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் 6383635071, தோட்டக்கலை அலுவலர் 6383635071 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் அன்னவாசல் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9786882155, தோட்டக்கலை அலுவலர் 9585359447 என்ற அலைபேசி எண்ணிலும், விராலிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் 7904223804, தோட்டக்கலை அலுவலர் 7358939489 என்ற அலைபேசி எண்ணிலும், பொன்னமராவதி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9578770294, தோட்டக்கலை அலுவலர் 7358939489 என்ற அலைபேசி எண்ணிலும், அரிமளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9600016824, தோட்டக்கலை அலுவலர் 9092620627 என்ற அலைபேசி எண்ணிலும், திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9994659469, தோட்டக்கலை அலுவலர் 9976250965 என்ற அலைபேசி எண்ணிகளிலும் தொடர்பு கொள்ளலாம். 

மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய வாய்ப்பினை அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வேளாண் பெருமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வேளாண் இணை
இயக்குநர் சுரேஷ்பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்
அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments