புதுக்கோட்டை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ‘டிஸ்சார்ஜ்’.!



புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். தற்போது கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சையில் யாரும் இல்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments