மணமேல்குடி அருகே ஊரடங்கு முடியும் வரை பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.!கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் மீனவ கிராம நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தது. ஆனால் கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்களுக்கு மீன் வியாபாரம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. வெளிமாவட்ட வியாபாரிகள் மீன் வாங்க அனுமதிக்கப்படாததும், மீன் மார்க்கெட்டுகள் செயல்படாததும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. 

மேலும் உள்ளூர் வியாபாரிகளும் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் மீன் வாங்க வருவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னகரம் பகுதி மீனவர்கள், ஊர் கட்டுப்பாடு விதித்து, ஊரடங்கு முடியும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என்று முடிவு செய்தனர். அதேபோல் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments