இந்தியாவில் கொரோனா பாதிப்பால் முதல் மருத்துவர் உயிரிழப்பு...



இந்தியாவில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000-ஐ  கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க மருத்துவப் பணியாளர்கள் இரவுபகலாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் பணிபுரிந்துவந்த அந்த மருத்துவர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்தூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழலில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments