நாட்டானிபுரசக்குடி ஏரியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மீன்கள் செத்தன..(படங்கள்)அரசநகரிப்பட்டினம் அருகே நாட்டானிபுரசகுடி கிராமத்தில் நாட்டானி ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து ஏரியில் விழுந்துள்ளது.


இதில் ஏரியில் இருந்த மீன்கள், பாம்பு போன்றவையும் செத்து கிடந்தன. இதையறிந்த கிராமத்தினர் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் தடுக்கப்பட்டது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் தொடும் அளவிற்கு மின் கம்பிகள் தாழ்வாக இருக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் அவர்கள் மின்கம்பியை இழுத்துக் கட்டவில்லை. இதனால்தான் மின்கம்பி அறுந்து குளத்தில் விழுந்து மீன்கள் செத்தன. இதன் பிறகும் மின் வாரியத்தினர் மின் கம்பிகளை இழுத்து கட்டவில்லை என்றால், கிராம மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

மீமிசல் பகுதியில் நேற்றைய தினம் இரவு 1.00 மணியில் இருந்து மதியம் வரை மின்சாரம் தடைப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments