பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?



மனித ரத்தத்தில் சிவப்பு அணுக்கள்,  வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என 3 வகையான அணுக்கள் உள்ளன. இதுபோக திரவநிலையில் பிளாஸ்மா உள்ளது.


ரத்தத்தில் சுமார் 55 சதவீத அளவுக்கு இருக்கும் பிளாஸ்மா ஊட்டச்சத்துக்கள் தண்ணீர், வைட்டமின்கள், தாது பொருள்கள், புரத பொருட்கள், ஹார்மோன்கள் மற்றும் ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய பிற காரணிகளை கொண்டிருக்கிறது. உடல் இயக்கவியலில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது. ரத்தத்திலிருக்கும் அனைத்து கூறுகளையும் திரவமாக உடல் முழுவதும் சுமந்து செல்கிறது.

அதுபோக, செல்கள் வெளியேற்றும் கழிவு பொருட்களையும் சுமந்து நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. அங்கு, நுரையீரல் சுத்திகரித்து ஆக்சிஜனை உடலுக்கு அனுப்புகிறது.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கு எதிராக உடலை பாதுகாப்பதில் பிளாஸ்மாவில் உருவாகும் இம்யூனோ குளோபின்கள் மற்றும் எதிர்ப்பு சக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்குள் படையெடுக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாப்பதில் இம்யூனோ குளோபின்கள் பாதுகாப்பு கேடயமாக முன் நிற்கிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா ஒரு முக்கிய பங்கினை கொண்டிருக்கிறது.

இத்தகையை பிளாஸ்மாவை தொற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது. தற்போது முழு ரத்தத்திற்கு பதில், தேவையான பகுதி மட்டும் பிரித்து பயன்பெறும் வசதியுள்ளது. அந்த வகையில் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்படும் பிளேட்லெட் செல்களை 1 வாரம் வரையிலும், சிவப்பு அணுக்களை 3,540 நாட்கள் வரையிலும், பிளாஸ்மா திரவத்தை உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் 1 வருடம் வரையிலும் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யூனோ குளோபின்கள், தொற்றுநோய் வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பலமடைந்திருக்கும். அதனை, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது.

1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின் போதும் குணமடைந்தவர்களிடம் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் இருந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இதுபோன்ற சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்தது. கொரோனா வைரசின் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை அமல்படுத்த சோதனை பணிகள் நடக்கிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments