கோபாலப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்கள் விநியோகம் தொடக்கம்.! (படங்கள்)



தமிழக ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை ரூபாய் 1,000 மற்றும் இலவசப் பொருட்கள் தமிழகம் முழுவது நேற்று முதல் விநியோகம் தொடங்கியது.


ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் அரிசி அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது.  

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் இன்று 03.04.2020 முதல் ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 100 குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்பட்ட டோக்கனில் உள்ள நேரங்களில் வந்து சமூக இடைவெளி விட்டு நின்று நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை வாங்கி சென்றனர்.இதேபோல் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ரேஷன் கடையில் 100 குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று நிவாரணத்தொகை, பொருட்களை வாங்கி சென்றனர்.

இதன்மூலம் நோய்த்தொற்றை தவிர்க்கலாம். பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடாமல் அவர்களுக்கு பாதுகாப்போடு நிவாரண பொருட்களை வழங்கலாம் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பு:தினமும் ஒவ்வொரு ரேஷன் கடை மூலம் 100 டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்கப்படும் எனவும், கூட்டத்தை தவிர்க்க டோக்கனில் உள்ள தேதியன்று ரேசன் கடைக்கு சென்று நிவாரண நிதி மற்றும் பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த காரணம் கொண்டும் டோக்கன் இல்லாதவர்கள் ரேஷன் கடைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments