“கொரோனா பாதிப்பை மதத்தோடு இணைத்து குழப்பம் ஏற்படுத்தக்கூடாது” - ஏ.ஆர்.ரஹ்மான்.!



கொரோனா பாதிப்பை மதத்தோடு ஒப்பிட்டு குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், சுயநலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உலகைத் தலைகீழாக மாற்றியுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது என குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது அண்ண்டை வீட்டார், முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் மனிதம், ஆன்மிகம் ஆகியவற்றின் அழகை செயலில் கொண்டு வரும் நேரமிது என கூறியுள்ள அவர், கடவுள் நம் மனதிற்கு உள்ளே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மதத்தின் அடிப்படையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசின் அறிவுரைகளை கேட்டு மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், வதந்திகளை பரப்பி மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments