ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்.!



ஆவுடையார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்துள்ளது.


இம்மழையை பயன்படுத்தி உழவு செய்தால் பெய்யும் மழைநீரை வீணாகாமல் வயலிலேயே தேக்கி வைக்கலாம். பயிரை தாக்கும் பூச்சிகளின் கூண்டு புழுக்கள் மண்ணில் இருந்தால் அவற்றை அழிக்கலாம். மேலும், நெல் பயிர்களுக்கு தீங்கு செய்யும் களைச்செடிகளின் விதைகளை அழிப்பதன் மூலம் மீண்டும் அதே களைகள் வராமல் தடுக்கலாம். கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு 3 ஏக்கர் வரை விவசாயம் நிலம் இருந்தால் டாபே நிறுவனம் இலவசமாக உழவு செய்து தர தயாராக உள்ளது. 

இதற்கு 9289200042 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் 2 என அனுப்பி பதிவு செய்யலாம் அல்லது உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் பயன் பெறலாம். எனவே ஆவுடையார்கோவில் வட்டார விவசாயிகள் தற்போது பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments