தீயத்தூரை சேர்ந்த சிறுமியின் மூக்கில் சிக்கிய கொலுசு முத்து.! லாவகமாக அகற்றிய அரசு மருத்துவர்.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள தீயத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மகள் மிதுனா (வயது 3). நேற்று முன்தினம் காலில் அணிந்து இருந்த கொலுசை எடுத்து மிதுனா விளையாடி கொண்டு இருந்தாள்.


 அப்போது கொலுசின் முத்து ஒன்று மூக்கின் உள்ளே சென்று சிக்கிக்கொண்டது. இதையடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு அலறினாள். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் முயற்சி செய்தும் மூக்கில் சிக்கிய முத்தை எடுக்க முடியவில்லை.

இதனால் சிறுமிக்கு வலி அதிகமாக ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை, அவரது பெற்றோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் சபீக் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிறுமியின் மூக்கில் சிக்கிய கொலுசு முத்தை லாவகமாக எடுத்தார். இதையடுத்து சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி பாராட்டினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments