கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது:வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்கள், தாயகம் திரும்ப விரும்பினால், அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பொது ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அந்த வகையில், தமிழகம் திரும்ப விரும்புவோர், nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தமிழகம் திரும்பு விரும்புவோரின் விவரங்களை அறியவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், அவர்கள் தாயகம் திரும்பியதும் தனிமைப்படுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையை அறியவும் இந்த இணையதளம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.