கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30.04.2020 நண்பகல் வியாழக்கிழமை பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பகல் 1 மணி வரை காய்கனி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.வெப்பம் அதிகரித்து வாட்டியதால் வீடுகளில் இருந்து வெளியில் வருவதை மக்கள் தவிா்த்தனா். வெப்பம் காரணமாக இரவு நேரங்களிலும் காற்றோட்டம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனா். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அவ்வப்போது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனிடையே கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. 1 மணி நேரம் மேல் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கோபாலபட்டிணத்தில் உள்ள நீா்நிலைகள், நீா்வரத்து ஓடைகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த கோடை மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments