புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை.. கலெக்டர் பேட்டி.!புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோட்டைப்பட்டினத்தில் மதுபோதைக்காக சேவிங் லோசனை அருந்திவிட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவும் மதுவிற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கும் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதிகள் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 19 பேர் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 10 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்து உள்ளது. மீதமுள்ள 9 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவ்வாறு இதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments