புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்பாடு.!கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு அரசு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை போக்குவரத்து கழக பொதுமேலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்ததாவது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி செய்து வரும் மாவட்ட புறநகர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் வந்து செல்ல கீழ்க்கண்ட வழித்தடங்களில் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் ஊரடங்கு முடியும் வரை இயக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டையிலிருந்து புறப்படும் பேருந்துகள் மேட்டுப்பட்டி, ஆலங்குடி, வானக்கன்காடு, கறம்பக்குடி வழியாக ரெகுநாதபுரம் வரையிலும், எரிச்சி வழியாக அறந்தாங்கி வரையிலும், காரையூர் வழியாக வலையபட்டி வரையிலும், நமணசமுத்திரம், திருமயம், கடியாபட்டி, ராயவரம், அரிமளம் வழியாக தேனிப்பட்டி வரையிலும், அன்னவாசல், இலுப்பூர் வழியாக விராலிமலை வரையிலும், சத்தியமங்கலம், கீரனூர், மாத்தூர் வழியாக ஆவூர் வரையிலும் இயக்கப்படுகிறது. 

அறந்தாங்கியிலிருந்து புறப்படும் பேருந்துகள் ஆவுடையார்கோவில், அமரடக்கி, திருப்புனவாசல், மீமிசல் வழியாக மணமேல்குடி வரையிலும், 

சுப்பிரமணியபுரம், நாகுடி, கண்டிச்சங்காடு, மணமேல்குடி வழியாக மீமிசல் வரையிலும், சிலட்டூர், பூவைமாநகர் வழியாக மேற்பனைக்காடு வரையிலும் இயக்கப்படுகிறது. 

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட 6 பேருந்துகளும், அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து 3 பேருந்துகளும் காலை 6.30 மணிக்கு இயக்கப்படுகின்றன. இவ்வாறு புதுக்கோட்டை போக்குவரத்து கழக பொதுமேலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்தார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments