மீமிசல் பகுதியில் ஊரடங்கால் உப்பு உற்பத்தி பாதிப்பு-தொழிலாளர்கள் வருவாய் இழந்து வேதனை.! அரசு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை.!புதுக்கோட்டை மாவட்டத்தில், கடலோரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வந்தனர். இதில் மீமிசல் கடலோர பகுதியில் மட்டும் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைத்து உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இங்கிருந்து எடுக்கப்படும் உப்பு பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது.

தற்போது கொரானோ வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்தகம், மளிகை கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் உப்பு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாததால் இங்கேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. எனவே தமிழக அரசு இப்பகுதியில் உப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments