புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் ரூ.1,000 நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்.!



பீகார் மாநில அரசின் மூலமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள பீகார் மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையினை பெற http://aapda.bih.nic.in/(S(n2bqbqfmqlneezwkpw4i15mw))/Default.aspx என்ற மின்னஞ்சல் முகவரியில் பயனாளியின் ஆதார் அடையாள அட்டை, பீகார் மாநிலத்தில் பயனாளியின் பெயரில் உள்ள வங்கியின் புத்தக நகல், சுய புகைப்படம் ஆகியவற்றினை சமர்ப்பித்து இந்த உதவித்தொகையினை பீகார் மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினர் பெற்று பயன்பெறலாம்.

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பீகார் மாநில அரசு அறிவித்துள்ள 011-23792009, 23014326, 23013884, 0612-2294204, 2294205 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் குடும்பங்கள் அம்மாநில அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையினை பெற்று பயனடையலாம். 

இத்தகவலினை பீகார் மாநில தொழிலாளர்களை பணியமர்த்தி உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் இந்த உதவித் தொகையினை பெற்றிட ஒத்துழைப்பு நல்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments