கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் மற்றும் குப்பைகள் அகற்றம்..! (படங்கள்)கோபாலப்பட்டிணத்தில் பாரத ஸ்டேட் வங்கி நுழைவாயிலில் இருந்து காட்டுக்குளம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பாரத ஸ்டேட் வங்கி நுழைவாயிலில் இருந்து காட்டுக்குளம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்து மேலே செல்லும் மின் கம்பிகளில் உரசிக்கொண்டு இருந்தது. இதனால் கோபாலப்பட்டிணத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. 
      
எனவே நாட்டாணிபுரசகுடி ஊராட்சி மன்ற தலைவர் நேற்று 10.04.2020 வெள்ளிக்கிழமை அன்று கள ஆய்வு மேற்கொண்டு ஜேசிபி(JCB) இயந்திரத்தின் மூலமாக சாலையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சாலையை விரிவுபடுத்தினார். மேலும் அந்த பகுதியில் கிடந்த குப்பைகள் மற்றும் கோபாலப்பட்டிணம் சில பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. 

கொரோனா வைரசின் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த வேளையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வரும் ஊராட்சி தலைவருக்கு GPM மீடியா சார்பா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments