புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க ஆட்சியர் உத்தரவு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகை கடைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளில் மட்டுமே செயல்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திடவும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நோய் பரவலை தடுக்கும்பொருட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் இனிமேல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், அக்கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உத்தரவிடப்படுகிறது. 

மேலும் இவ்வுத்தரவினை கடைப்பிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments