மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்.!இலுப்பூர் கல்வி மாவட்டம், மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் இளஞ்சேகரன்.


இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளியில் படிக்கும் 20 ஏழை, எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments