கோவையில் இறந்த கிறிஸ்தவரின் உடலை நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.!!!இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவையில் வசிக்கும் கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் மரணித்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டனர்.


இதனால் அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் இராமநாதபுரம் மாவட்ட தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

அதனடிப்படையில் கோவை வடக்கு மாவட்டம் தமுமுகவின் உதவியால் கோவையில் இறந்த இராமநாதபுரம் கிறிஸ்தவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் கோவை சாதிக், மருத்துவசேவை அணி மாநில துணைச்செயலாளர் முகமது ரபி, கோவை மருத்துவசேவை அணி மாவட்ட பொருளாளர் பைசல், முன்னாள் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சபி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.தகவல்:
தமுமுக மமக ஊடகப்பிரிவு,
கோவை வடக்கு மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments