அறந்தாங்கி பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருட்டு.!அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தற்போது சில்லரை காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நாள்தோறும் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


1 மணிக்கு பிறகு மீதமுள்ள காய்கறிகள் அனைத்தையும் தார்ப்பாய் போட்டு மூடி கடைகளுக்கு அருகே கட்டி வைத்து விட்டு செல்கின்றனர். பின்னர் மறுநாள் வந்து அதை எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வரும் செந்தில் என்பவர் நேற்று முன்தினம் கடையின் அருகே காய்கறி மூட்டைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது அதில் இருந்த 50 கிலோ வெங்காய மூட்டை ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இங்கே அடிக்கடி காய்கறி திருட்டு நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments