புதுக்கோட்டை மாவட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்க கலெக்டருக்கு மனு.!ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜன், மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்துக்கும் இதே நிவாரண பொருட்கள் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிவாரண பொருட்களே இதுவரை வழங்கப்படவில்லை.

தொழிலாளர்களின் வாரிய அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை அஞ்சல், இ-மெயிலிலும் அனுப்ப கேட்டிருந்தார்கள். தொழிலாளர்களும் அனுப்ப காத்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கணக்கின்படி, 69 ஆயிரத்து 315 கட்டுமானத் தொழிலாளர்களும், 41 ஆயிரத்து 248 அமைப்பு சாரா தொழிலாளர்களும், 4 ஆயிரத்து 119 ஆட்டோ ஓட்டுனர்களும் வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 

அதற்கு பிறகு இந்த எண்ணிக்கை கூடியிருக்கும். மேலும், புதுப்பித்தலுக்காக கொடுத்த விண்ணப்பங்களில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசின் உதவித்தொகை விரைந்து கிடைத்திட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments