கட்டுமாவடி அருகே கடலில் செத்து மிதந்த புள்ளி மான்.!கட்டுமாவடி அருகே உள்ள கடலில் புள்ளி மான் ஒன்று செத்து மிதந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கடலில் இறங்கி அந்த புள்ளிமான் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கும், மணமேல்குடி கடலோர காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், வனசரகர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செத்து கிடந்த புள்ளி மானை மீட்டனர்.

கடந்த 22.03.2020 அன்று கிருஷ்ணாஜிபட்டினத்தில் கடலில் தத்தளித்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments