புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசர வாகன அனுமதிக்கு..!புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசரக் காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கும் அதிகாரம் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அறிவித்துள்ளாா்.


அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), வருவாய்க் கோட்டாட்சியா், மாவட்டக்காவல் கண்காணிப்பாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் நிலையிலுள்ள அலுவலா்கள் அனுமதிச் சீட்டு வழங்குவா். அதேபோல, திருமணம் (ஏற்கெனவே முடிவு செய்தது மட்டும்), மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்களை அணுக வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments