கோபாலப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கன் வீடுவீடாக வினியோகம்…!கோபாலப்பட்டிணத்தில் கொரோனா நிவாரண தொகை ரூ.1000 மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கன் வீடுவீடாக வினியோகம் துவங்கியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நலன் கருதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருள்கள் விலையில்லாமலும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் இன்று 02.04.2020 வார்டு வாரியாக அவுலியா நகரில் உள்ள வீடுகளுக்கே நேரடியாக சென்று 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.அதனடிப்படையில் டோக்கன் வாங்கியவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பணம் மற்றும் பொருள் விநியோகம் 15-ம் தேதி வரை நடைபெறும் எனவும், ஆதலால் கூட்டத்தை தவிர்க்க டோக்கனில் உள்ள தேதியன்று ரேசன் கடைக்கு சென்று நிவாரண நிதி மற்றும் பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணத்தை பொறுத்தவரையில் சுமார் 1300 குடும்ப அட்டைதாரர்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:ரேஷன் கடையில் தினமும் நூறு குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments