இனியும் இப்படி நடந்தால் குண்டர் சட்டம் தான்..காவல் ஆணையர் உச்சக்கட்ட எச்சரிக்கை.!!கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பவர்கள் மீது இனி குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் தன்னுயிரை பணயம் வைத்து மருத்துவர்களும்,தூய்மை பணியாளர்களும் இரவுபகல் பாராமல் பணி செய்து வருகிறார்கள்.

இதனிடையே சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌, காவல் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக 20ககும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments