சமூக வலைதளத்தில் இனி முஸ்லீம்களுக்கு எதிராக பதிவு போட்டால் ஆப்பு நிச்சயம்..!



சமூக வலைதளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவிடும் நபர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கொரோனாவை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக பாஜக மற்றும் அதன் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த நபர்களால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக வளைகுடாவில் பணிபுரியும் இந்துத்துவா கொள்கைகளை கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து பரப்பி வருகின்றனர்.இது முஸ்லீம்களிடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இந்த இந்துத்துவ அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை அடுத்து மோடி, ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது, இதில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவை எதிர்க்க வேண்டும். சகோதரத்துவம்தான் நமது கொள்கை” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதுவர் பவன் கபூர் ஐக்கிய அரபு வாழ் இந்தியர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்திருத்துள்ளார். “இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் நல்ல உறவு உண்டு, இருவருக்கும் இடையே எந்த பாகுபாடும் இல்லை. எனவே பாகுபாடு காட்டுவது சட்டத்திற்கு எதிரானது. இதனை இந்தியர்கள் உணர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற மத துவேச பதிவுகளை பதிவு செய்தவர்களின் வேலையை பறிப்பதும்,கருத்துக்களை பதிவு செய்தவர்கள் தீவிர மன்னிப்பும் கேட்டு வருவது வைரலாகி வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments