புதுக்கோட்டை மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.டி.யு.சி. அறிக்கை.!புதுக்கோட்டை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் தர்மராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் உணவுப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் யாருக்கும் கிடைக்கப்பெறவில்லை. மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி குறிப்பிட்ட எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கு அட்டையின் முதல் பக்கம், தொலைபேசி எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர். ஆனால் இன்னும் யாருக்கும் நிதி கிடைக்க வில்லை. மேலும் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பெயர் பட்டியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. 

அந்தப் பட்டியலில் ஒரு நபரின் பெயர் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது. இலுப்பூர் தாலுகாவில் உள்ள தொழிலாளர்களின் பெயர்கள் அறந்தாங்கி தாலுகா ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பெயர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற பட்டியல் படி நிவாரணம் அனுப்பப்பட்டால் உண்மையான தொழிலாளர்களுக்கு போய் சேர வாய்ப்பில்லை எனவே தொழிலாளர்கள் வாட்ஸ்-அப்பின் மூலம் அனுப்பி வைக்கும் முகவரிகளில் இவைகளை சரியாக பட்டியல் அனுப்ப வேண்டும். 

நல வாரிய அலுவலகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தும்போது வங்கிகளில் இணைய சேவையில் தாமதம் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் எடுத்து கூடுதல் வங்கிச்சேவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணமும் உணவுப் பொருட்கள் தொகுப்பும் வழங்க வேண்டும். குளறுபடிகளால் உரியவர்களுக்கு போய் சேருமா என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டம், உரியவர்களுக்கு விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments