புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையில் தவறு நடந்ததா.?சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று இல்லை என்ற அறிவிப்பு மாறி 27 வயது இளைஞருக்கு தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது என அறிவித்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டெல்லி சென்று திரும்பிய 15 நபர்களும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டபின்தான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களின்  குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் டெல்லி  சென்று வந்த மூன்று நபர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையில், அரிமளம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனுக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கிராமத்தை சுற்றிய எட்டு கிலோமீட்டர் பரப்பளவிலான அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிராமங்களிலுள்ள ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பிற்கு உள்ளான நபரின் கிராமத்தில் உள்ள 766 வீடுகளில் வசித்துவரும் 2923 நபர்களும் தொடர்ந்து சுகாதாரத்துறையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி சென்று திரும்பியவருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அவரது மகனுக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது. அப்படியானால் பரிசோதனைகளில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா? பல நாட்களாக இவர்கள் வெளியிடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் வேறு யாருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments