ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையா? புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை பெற செல்போன் எண்கள் அறிவிப்பு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறைகளை குறைப்பதற்காக ஆலோசனை வழங்குவதற்காகவும், உதவி செய்வதற்காகவும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மாவட்ட சமூகநல அலுவலக பாதுகாப்பு அலுவலரை 63830 89492, குடும்பநல ஆலோசகரை 95663 06500, ஒருங்கிணைந்த சேவை மையத்தை 98498 91308 மற்றும் முதுநிலை ஆலோசகரை 96006 22046 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் உதவிகள் பெறலாம். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களை தற்காலிக ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் புகார்கள் ஏதும் இருப்பின் பெண்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கு www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் KNOW YOUR DPOS/CDPOS/SUPERVISORS AWWS/AWHS/AWCS என்ற மெனுவை தேர்வு செய்து தங்களது பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்களின் செல்போன் எண்களை பெற்று புகார்களை தெரிவிக்கலாம்.

இதேபோல குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் 181 என்ற உதவி எண்ணிற்கும், காவல்துறையின் 1091 என்ற எண்ணிற்கும், பெண்கள் தேசிய உதவி எண் 112 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments