மீமிசல் ஊராட்சி சார்பில் விழித்திரு,விலகியிரு,வீட்டிலிரு என்ற வாசகத்துடன் ECR சாலையில் விழிப்புணர்வு ஓவியம்.!மீமிசல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த சாலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் பரவலையொட்டி, நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளபோது, அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் மக்கள் வெளியே வருகின்றனா். மக்களிடையே கரோனா வைரஸ் குறித்து பாதுகாப்பாக நடந்து கொள்ளக்கூடிய விழிப்புணா்வுகள் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மீமிசல் ஊராட்சி மற்றும் காவல்துறை சார்பாக மீமிசல் பேருந்து நிலையம் அருகில் இன்று 12.04.2020 கிழக்கு கடற்கரை சாலையில் (ECR)  கொரோனா ‘கோவிட்-19’ வைரஸ் உருவம் மற்றும் அதன் கீழ் விழித்திரு,விலகியிரு,வீட்டிலிரு என்ற வாசகத்துடன் வரையப்பட்டுள்ளது. மேலும் நாளை 13.04.2020 காவல் நிலையம் அருகிலும்  ஓவியம் வரையப்பட உள்ளனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments