மீமிசல் பகுதியில் 144 தடை உத்தரவை மீறியதாக 20 வாகனங்கள் பறிமுதல்: 52 போ் மீது வழக்கு.!மீமிசலில் 144 தடை உத்தரவை மீறி கடை வீதிகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த 20 வாகனம் பறிமுதல் மற்றும் 52 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 24.03.2020 அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் காவல்துறையினா் தேவையில்லாமல் கடை வீதியில் சுற்றித் திரிந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மோட்டர் வாகன சட்ட விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 24.03.2020 முதல் 11.04.2020 வரை 52 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீமிசல் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 144 தடை உத்தரவு நீங்கிய பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மீமிசல் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

மேலும் காவல்துறையினர் கூறுகையில் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் உள்ள தெருக்களில் ஒன்றாக கூடி பேசிக்கொண்டிருப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மீமிசல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஊர்களில் உள்ள தெருக்களில் காவல்துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் சில பிறருடைய வாகனத்தை வாங்கி கடைத் தெருவில் சுற்றி திரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சொந்த இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த நேரத்தில் வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments